ஜாம்நகர்-நெல்லை எக்ஸ்பிரஸ் 6ம்தேதி முதல் இயக்கம்

நெல்லை: குஜராத் மாநிலம் ஜாம்நகர்- நெல்லை இடையே சிறப்பு ரயில் வரும் 6ம் தேதி முதல் இயக்கப்பட உள்ளது. இதற்கான முன்பதிவுகள் தற்போது நடந்து வருகிறது. வண்டி எண் 09578 ஜாம்நகர்- நெல்லை வாரமிருமுறை சிறப்பு ரயில் ஜாம்நகரில் இருந்து வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் இரவு 9 மணிக்கு புறப்பட்டு, ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் இரவு 10.10 மணிக்கு நெல்லை வந்து சேரும். மறுமார்க்கத்தில் வண்டி எண் 09577 நெல்லை- ஜாம்நகர் வாரம் இருமுறை சிறப்பு ரயில் திங்கள் மற்றும் செவ்வாய்கிழமைகளில் காலை 7.45 மணிக்கு புறப்பட்டு புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் அதிகாலை 5.15 மணிக்கு ஜாம்நகர் சென்று சேரும்.

இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன 2 அடுக்கு படுக்கை வசதி பெட்டி, 5 குளிர்சாதன 3 அடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 11 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி கொண்ட பெட்டிகள், 4 இரண்டாம் இருக்கை வசதி பெட்டிகள், ஒரு காப்பாளர் பெட்டி மற்றும் மாற்றுதிறனாளிகளுக்கான இருக்கை வசதி பெட்டிகள் இடம் பெற்றிருக்கும். இந்த ரயில்களின் சேவை ஜாம்நகரில் இருந்து வரும் நவம்பர் 6ம் தேதி முதலும், நெல்லையில் இருந்து நவம்பர் 9ம் தேதி முதலும் தொடங்க உள்ளது. இந்த ரயில்கள் வள்ளியூர், நாகர்கோவில் டவுன், பாறசாலா, திருவனந்தபுரம், கொல்லம், காயங்குளம், ஆலப்புழா, எர்ணாகுளம், ஆலுவா, திருச்சூர், ஷோரனூர், ேகாழிக்கோடு,

கண்ணனூர், காசர்கோடு, மங்களூரு, உடுப்பி, கார்வார், மட்கான், ரத்தினகிரி, பனுவல், வசைரோடு, போய்சார், வாபி, சூரத், அங்கலேஷ்வர், வதோரா, அகமதாபாத், சுரேந்தர்நகர், ராஜ்கோட், ஹபா ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

Related Stories: