தமிழகத்தின் 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை மையம் அறிவிப்பு

சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 6 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  தமிழகத்தில் நிலவும் வெப்பச் சலனம் காரணமாக வளிமண்டல மேலடுக்கில் காற்று சுழற்சி உருவாகியுள்ளது. அதனால் கடந்த ஒரு வாரமாக ஆந்திரா, தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. ஆந்திராவை ஒட்டிய கடலோரப் பகுதியில் நேற்று முன்தினம் நிலை கொண்டு இருந்த காற்றழுத்தம் காரணமாக தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழகத்திலும் பலத்த மழை பெய்துள்ளது. தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக சிவகாசி, மலையூர் 60 மிமீ மழை பெய்துள்ளது.

இந்நிலையில், வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, சேலம், தர்மபுரி மாவட்டங்–்களில் ஒரு சில இடங்களில் இடியுடன்கூடிய கனமழை பெய்யும். ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், கரூர், நாமக்கல், பெரம்பலூர், திருச்சி, கடலூர், அரியலூர் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடு துறை, காரைக்கால், பகுதிகளில் ஒரு சில இடங்ககளில் இடியுடன் கூடிய லேசான மழையும் பெய்யும். சென்னையில் பொதுவாக மேகமூட்டம் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யும்.

Related Stories: