திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவு

திருப்பூர்: புதிதாக கட்டப்பட்டுள்ள திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டார். திருப்பூர் மாவட்டம் உருவாக்கப்பட்டு, ஆறாண்டுக்குப் பின்னர் தான் நீதித்துறையில் மாவட்ட செசன்ஸ் கோர்ட் உள்ளிட்டவை துவங்கப்பட்டன. ஆனால், இதற்கான உரிய கட்டடங்கள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதி எதுவுமில்லை. பனியன் நிறுவனம் செயல்பட்டு வந்த குறுகலான பகுதிக்குள், குறுகிய கட்டடத்தில் இவை இயங்கி வருகின்றன. ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம் அமைக்க வேண்டும் என்ற தொடர் கோரிக்கையை அடுத்து கடந்தாண்டு 2018 ஜூலை மாதம் இதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது.

திருப்பூரில் கலெக்டர் அலுவலகம் பின்புறம், 10 ஏக்கர் நிலம், மாவட்ட நீதித்துறைக்கு ஒதுக்கப்பட்டது. அதில் 37 கோடி ரூபாய் மதிப்பில், ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம் அமைக்க திட்டமிடப்பட்டது. கோர்ட் கட்டடம் ரூபாய் 37 கோடி மதிப்பில், தரை மற்றும் மூன்று தளங்களுடன் மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம், 1 லட்சத்து, 66 ஆயிரத்து, 441 சதுரடி பரப்பில் அமைகிறது. செசன்ஸ் கோர்ட், இரு கூடுதல் மாவட்ட கோர்ட் ஆகிய மூன்று மாவட்ட கோர்ட்டுகள்; முதன்மை குற்றவியல் கோர்ட்; நான்கு ஜே.எம்., கோர்ட் என எட்டு கோர்ட்டுகள் அமைகிறது. வந்து செல்வோர் வசதிக்காக எட்டு இடங்களில் லிப்ட்களும் எட்டு இடங்களில் படிக்கட்டுகளு  அமைக்கப்படுகிறது.

அத்துடன் நீதிபதிகள் அறை; ஊழியர் அறை; போஸ்ட் ஆபீஸ், பதிவு அறை; தலைமை எழுத்தர் அறை; இருப்பு அறை; கோர்ட் அலுவலகம்; அரசு வக்கீல்கள் அறை; சிரஸ்தார்; போலீஸ் காத்திருப்பு அறை; லாக்-அப் மற்றும் கழிப்பிடம். மேலும் சிறப்பு வசதிகளாக, கண்காணிப்பு கேமராக்கள்; மைக் சிஸ்டம்; தீத்தடுப்பு உபகரணங்கள்; ஆர்.ஓ., குடிநீர் வசதி; சோலார் மின் வசதி மற்றும் இண்டர்காம் வசதிகள் செய்யப்படுகிறது. இதன் கட்டுமானப் பணி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதனையடுத்து இன்று சென்னை உயர்நீதிமன்றம் தலைமை நீதிபதிஅமரேஸ்வர் பிரதாப் சாஹி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

Related Stories: