அமாவாசை தினத்தில் மஞ்சக்கொம்பை நாகராஜர் கோயிலில் பக்தர்கள் கூட்டம் பாதியாக குறைந்தது

ஊட்டி: ஊட்டி அருகேயுள்ள மஞ்சக்கொம்பை நாகராஜர் கோயிலில் அமாவாசை தினமான நேற்று பக்தர்கள் கூட்டம் குறைந்தே காணப்பட்டது. ஊட்டி அருகேயுள்ள மஞ்சக்கொம்பை பகுதியில் நாகராஜர் மற்றும் ஹெத்தையம்மன் கோயில் உள்ளது. இங்குள்ள நாகராஜர் கோயிலுக்கு மாதம் தோறும் அமாவாசை தினத்தன்று நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், சமவெளிப் பகுதிகளிலும் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம். காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இங்கு பூஜைகள் நடக்கும். பக்தர்களின் வசதிக்காக ஊட்டி மற்றும் குன்னூர் போன்ற பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ் இயக்கப்படுவது வழக்கம்.

இந்நிலையில், கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 6 மாதமாக கோயில் திறக்கப்படாத நிலைியல், பக்தர்கள் வர முடியாத நிலை ஏற்பட்டது. மேலும், தற்போதும் குறைந்தளவே பஸ்கள் இயக்கப்படுகிறது. மேலும், சமவெளிப் பகுதிகளில் இருந்து வர இ பாஸ் தேவை என்பதால், பக்தர்கள் வருகை மிகவும் குறைந்தே காணப்பட்டது. நேற்று புரட்டாசி மாத அமாவாசை என்ற போதிலும், நேற்று கோயிலுக்கு குறைந்தளவே பக்தர்கள் வந்திருந்தனர். பக்தர்கள் அனைவரும் சமூக இடைவெளிவிட்டு பூஜைகளில் ஈடுப்பட்டனர்.

Related Stories: