சிறப்பு அந்தஸ்து வழங்கினால் அண்ணா பல்கலையில் இடஒதுக்கீடு பாதிக்கப்படும் என்பது தவறு: தமிழக பாஜ தலைவர் பேட்டி

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து வழங்கினால் இடஒதுக்கீடு பாதிக்கப்படும். இதனால் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை என்று உயர்க்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் தமிழக பாஜ தலைவர் எல்.முருகன் நேற்று அளித்த பேட்டியில், “அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சுதந்திரமாக செயல்படுவதற்கு முயற்சிக்கிறார். அவரை சுதந்திரமாக செயல்படவிடக்கூடாது என்று சில பேர் செயல்படுகிறார்கள். சிறப்பு அந்தஸ்து மூலமாக எந்த நேரத்திலுமே, எந்த இடத்திலும் இடஒதுக்கீடு பாதிக்கப்படாது.

இடஒதுக்கீடு என்பது அரசியலைப்பு சட்டப்படி உரிமை. எல்லா இடத்திலும் இடஒதுக்கீடு இருக்கிறது. எப்படி இடஒதுக்கீட்டை எடுக்க முடியும். எவ்வளவு சிறப்பு அந்தஸ்து கொடுத்தாலும் இடஒதுக்கீட்டை எடுக்க முடியாது” என்றார்.

Related Stories: