தங்கம் ஒரே நாளில் 264 அதிகரிப்பு: சவரன் விலை மீண்டும் 39,000ஐ தொட்டது

சென்னை: தங்கம் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு 264 உயர்ந்தது. மீண்டும் சவரன் 39 ஆயிரத்தை தொட்டுள்ளது நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தங்கம் விலை கடந்த மாதம் முதல் ஏறுவதும், இறங்குவதுமான போக்கு காணப்பட்டு வருகிறது. இந்த மாதமும் இதேநிலைதான் நீடித்து வருகிறது. நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் 4,830க்கும், சவரன் 38,640க்கும் விற்கப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை தங்கம் விலை அதிரடியாக உயர்வை சந்தித்தது. கிராமுக்கு 23 அதிகரித்து ஒரு கிராம் 4,853க்கும், சவரனுக்கு 184 அதிகரித்து ஒரு சவரன் 38,824க்கும் விற்கப்பட்டது. மாலையில் தங்கம் விலை மேலும் உயர்ந்தது.

அதாவது நேற்று முன்தினம் விலையை விட கிராமுக்கு 33 அதிகரித்து ஒரு கிராம் 4,863க்கும், சவரனுக்கு 264 அதிகரித்து ஒரு சவரன் 38,904க்கும் விற்கப்பட்டது. தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு 264 அதிகரித்து இருப்பது நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அதே நேரத்தில், தங்கம் விலை மீண்டும் சவரன் 39 ஆயிரத்தை தொட்டுள்ளது மேலும் அவர்களை கலக்கமடைய செய்துள்ளது. வரும் நாட்களில் அதிகளவில் விசேஷ தினங்கள் வருகிறது. இந்த நேரத்தில் விலை உயர்ந்து வருவது நகை வாங்க பணம் சேர்த்து வைத்திருப்பவர்களுக்கு கூடுதல் செலவை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: