பராமரிப்பின்றி கிடக்கும் தவளைமலை காட்சி முனை

கூடலூர்: கூடலூர்-ஊட்டி சாலையோரத்தில் உள்ள புதர் மண்டி கிடக்கும் காட்சியை முனை பகுதியை சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கூடலூர்-ஊட்டி சாலையில் கூடலூரில் இருந்து 14 கி.மீ. தூரத்தில் உள்ளது தவளை மலை காட்சி முனை. பிரதான சாலையில் வாகனங்களில் செல்லும்போதே தவளை மலையின் பல்வேறு தோற்றங்களை காண முடியும். இந்த பகுதியில் உள்ள தவளை மலை காட்சி, கூடலூர் பள்ளத்தாக்கு மற்றும் ஊசி மலை காட்சிகளை காணும் வகையிலும் சாலையோரத்தில் சுற்றுலா பயணிகள் நின்று பார்ப்பதற்கு வசதியாக காட்சியை முனை கோபுரம் அமைக்கப்பட்டது.

அந்த இடம் தற்போது புதர்கள் மண்டியும் உள்ளே உள்ள தடுப்பு கம்பிகள், சுவர்கள் இடிந்தும் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. தற்போது கொரோனா  தடுப்பு நடவடிக்கைகளால் சுற்றுலா பயணிகள் வருகை இல்லாத நிலையிலும் எதிர்காலத்தில் சுற்றுலாப் பயணிகள் வரும் காலங்களில் இதனை முறையாக பராமரிக்க வேண்டும் என சுற்றுலா ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: