முதல்வர் வேட்பாளராக பழனிசாமியை பாஜ ஏற்குமா? எல்.முருகன் பதில்

சென்னை: சென்னை அடையாறில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட தமிழக பாஜ தலைவர் எல்.முருகன் நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுகவில் முதல்வர் வேட்பாளராக முதல்வர் பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளார். அவரை முதல்வர் வேட்பாளராக பாஜ ஏற்றுக் கொள்ளுமா என்று கேட்கிறீர்கள். முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளேன். அப்படி என்றால், என்ன அர்த்தம் என்பதை நீங்களே புரிந்து கொள்ளுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: