கல்லிடைக்குறிச்சி அருகே வனப்பகுதியில் நோயுற்ற யானை தவிப்பு: கண்டுகொள்ளாத வனத்துறை

வி.கே.புரம்: கல்லிடைக்குறிச்சி அருகே வனப்பகுதியில் நோயுற்ற யானை தவித்து வருகிறது. அந்த யானையை மீட்டு  வனத்துறையினர் சிகிச்சை அளிக்க வேண்டுமென வனவிலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  நெல்லை மாவட்டம், கல்லிடைக்குறிச்சி மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதியில் கடந்த சில நாட்களாக நோயுற்ற யானை ஒன்று  சுற்றி வருகிறது. நேற்று கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள பொட்டல் மலையடிவாரத்தில் உள்ள 80 அடி கால்வாய் அருகில் அந்த  யானை நடமாட்டம் காணப்பட்டது. உடல் மெலிந்த நிலையில் உள்ள இந்த யானை நடக்க முடியாமல் சோர்ந்து படுத்து விடுகிறது.

 இதுகுறித்து அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தும் யானையை மீட்க இதுவரை எவ்வித  நடவடிக்கையும் எடுக்கவில்லை. வீரவநல்லூர் பகுதியிலும் கடந்த சில நாட்களாக மற்றொரு யானை தோட்டங்களில் புகுந்து  அட்டகாசம் செய்து வருகிறது.  எனவே, வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து கல்லிடைக்

குறிச்சி வனப்பகுதியில் சுற்றும் நோயுற்ற யானையை மீட்டு உரிய சிகிச்சை அளிப்பதுடன், வீரவநல்லூர் மலையடிவார  பகுதியில் அட்டகாசம் செய்து வரும் யானையை காட்டுக்குள் விரட்ட  வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காட்டு பன்றிகள் அட்டகாசம்

வி.கே.புரம் அருகே மணிமுத்தாறு பேரூராட்சிக்கு உட்பட்ட வேம்பையாபுரம் காலனித்தெருவை சேர்ந்தவர் மாரியப்பன் (65),  விவசாயி. இவருக்கு  சொந்தமான வயல் வேம்பையாபுரம் பகுதியில் உள்ளது. அங்கு அவர் வாழைகள்    பயிரிட்டு உள்ளார்.  நேற்று முன் தினம் இரவு இவரது வாழை தோட்டத்தில் காட்டு பன்றிகள் புகுந்து வாழைகளை சேதப்படுத்தியது.

Related Stories: