2021 சட்டமன்ற தேர்தல்: வாக்காளர் திருத்த முறை குறித்து வரும் 3-ம் தேதி அனைத்து கட்சி கூட்டம்...தமிழக தலைமை தேர்தல் ஆணையர் தகவல்.!!!

சென்னை: வாக்காளர் பட்டியல் திருத்த முறை குறித்து வரும் 3-ம் தேதி அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என்று தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரத சாகு அறிவித்துள்ளார். தமிழகத்தில் 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களுக்கு மேல் உள்ள நிலையில், தமிழகத்தில் அரசியல் கட்சிகள் இப்போதே கூட்டணி வியூகங்களை அமைக்கத் தொடங்கிவிட்டனர். தமிழகத்தின் பிரதான கட்சியான ஆளும் அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அறிவித்துள்ளது. அதே போல, எதிர்க்கட்சியான திமுக அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின்தான் முதல்வர் வேட்பாளர் என்பது உறுதியாகி உள்ளது.

இதற்கிடையே, 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்காக வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம், நீக்கம் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. வரும் ஜனவரி மாதம் ஏற்கனவே வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியல் ஒவ்வொரு முறை தயார் செய்யப்படும்போதும் பட்டியலில் திருத்தம், நீக்கம் குறித்து அனைத்துக்கட்சியினரும் தங்கள் தரப்பு புகார்களை தெரிவித்து வருகின்றனர். பட்டியல் தொடர்பான தங்கள் சந்தேகங்களையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், 20201-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வாக்காளர் பட்டியல் தொடர்பான சந்தேகங்களை தீர்க்க அடுத்த மாதம் நவம்பர் 3-ம் தேதி சிறப்பு வாக்காளர் திருத்த முறை குறித்து அனைத்து கட்சியினருடன் ஆலோசனை சென்னை தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரத சாகு தலைமையில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியிகள் பங்கேற்று தங்கள் கருத்துகளை தெரிவிக்கவுள்ளனர்.

Related Stories: