இந்துத்துவாவை பின்பற்றுகிறவன் என்பதற்கு நீங்கள் சான்று கொடுக்க அவசியமில்லை...மகாராஷ்டிரா ஆளுநருக்கு மாநில முதல்வர் உத்தவ் பதில்.!!!

மும்பை: நான் ஹிந்துத்வாவை பின்பற்றுகிறவன்தான் என மாநில ஆளுநருக்கு மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே பதிலளித்துள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும், தளர்வுகளை 5-ம் கட்டங்களாக  மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசின் தளர்வுகளை மாநில அரசுகளும் ஆலோசனை செய்து தங்கள் மாநிலத்திற்கு ஏற்ப அமல்படுத்தி வருகின்றனர். இதற்கிடையே, இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநிலமான  மகாராஷ்டிராவில், பல்வேறு தளர்வுகளை மாநில அரசு அறிவித்துள்ளது. இருப்பினும், ஆனால், மகாராஷ்ரா அரசு 2-வது அலை கொரோனா பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக கோயில் உள்ளிட்ட சில இடங்களை திறக்க இன்னும்  மாநில அரசு அனுமதி அளிக்கவில்லை.

இதற்கிடையே, மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே-க்கு மாநில ஆளுநர் பகத்சிங் கோஷியாரி எழுதிய கடித்தில், கொரோனா முன்னெச்சரிக்கைகளுடன் வழிபாட்டுத் தலங்களை மீண்டும் திறக்கக் கோரி வலியுறுத்தியுள்ளார். மேலும், பார்கள் கடற்கரைகள் மற்றும் உணவகங்களை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், கோயில்கள் ஏன்? மூடப்பட்டுள்ளன. நீங்கள் இந்துத்துவத்தின் வலுவான வாக்காளராக இருந்தீர்கள், மேலும் ராமர் மீதான உங்கள் பக்தியை பகிரங்கமாக  ஆதரித்தீர்கள். கோயில்கள் மீண்டும் திறக்கப்படுவதைத்தள்ளிவைக்க ஏதேனும் தெய்வீக முன்னறிவிப்பைப் பெறுகிறீர்களா? அல்லது திடீரென்று மதச்சார்பற்றவர்களாக மாறிவிட்டீர்களா? எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது என கடிதத்தில்  குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், ஆளுநர் கடிதத்திற்கு பதிலளித்துள்ள மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, ஊரடங்கு உத்தரவு திடீரென பிறப்பிக்கப்பட்டது சரியில்லை, தற்போது உடனே தளர்வுகளை அறிவிப்பது ஒரு நல்ல விஷயமாக இருக்காது. மேலும்,  நான் இந்துத்துவாவை பின்பற்றுகிறவன். இந்துத்துவாவை பின்பற்றுகிறவன் என்பதற்கு நீங்கள் சான்று கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்று பதிலளித்துள்ளார்.

Related Stories: