பொருளாதாரத்துக்கான நோபல் இரண்டு அமெரிக்க நிபுணர்கள் தேர்வு

ஸ்டாக்ஹோம்: பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அமெரிக்காவை சேர்ந்த இரண்டு ஆராய்ச்சியாளர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. உலகின் உயரிய விருதுகளில் ஒன்றான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு வருகிறது. நேற்று பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. அமெரிக்காவை சேர்ந்த பொருளாதார நிபுணர்கள் இரண்டு பேருக்கு இந்த விருது பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த பால் ஆர் மில்குரோம் மற்றும் ராபர்ட் பி வில்சன் ஆகியோர் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசை பெற்றுள்ளனர். கொரோனா நோய் தொற்று தாக்கத்தின் காரணமாக இரண்டாவது உலகப் போருக்கு பின்னர் தற்போது உலகின் பெரும்பாலான நாடுகள் பொருளாதாரத்தில் மிக மோசமான நிலையை அனுபவித்து வரும் சூழலில் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஏலக்கோட்பாட்டின் மேம்பாடு, ஏலத்திற்கான புதிய வடிவமைப்பு ஆகியவை குறித்த ஆராய்ச்சிக்காக இந்த நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: