ஊராட்சி மன்ற தலைவருக்கு நேர்ந்தது விரும்ப தகாத செயல்: அமைச்சர் காமராஜ் வருத்தம்

திருவாரூர்: ‘கடலூரில் ஊராட்சி மன்ற தலைவர் தரையில் அமர்த்தப்பட்ட விவகாரம் விரும்பத்தகாத செயல்’ என்று அமைச்சர் காமராஜ் வருத்தம் தெரிவித்தார். தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ், திருவாரூரில் அளித்த பேட்டி: திருவாரூர் மாவட்டத்தில் 239, தஞ்சாவூர் மாவட்டத்தில் 267, நாகையில் 149 என டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் 858 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது. இதன்முலம் நடப்பு காரீப் பருவத்தில்  மட்டும் விவசாயிகளிடமிருந்து 74 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது.

தேவைப்படும் இடங்களில் விவசாயிகள் கேட்கும்பட்சத்தில் கூடுதலாக நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சம்பா  சாகுபடிக்கு தேவையான உரம் இடுபொருட்கள் அனைத்தும் கையிருப்பில் உள்ளது. சிதம்பரத்தில் ஊராட்சி மன்ற தலைவர் தரையில் அமர்த்தப்பட்ட விவகாரம் விரும்பத்தகாத செயல் ஆகும். இதுபோன்ற விவகாரங்களில் அரசு உடனடியாக உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதிமுக வழிகாட்டுதல் குழுவில் இடம்  பெறாதது தனக்கு மகிழ்ச்சி என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அவர், அதிமுகவில் மூத்த நிர்வாகி. அவர் எந்தக் கருத்து கூறியிருந்தாலும் உளப்பூர்வமாகவே கூறியிருப்பார். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: