டெல்லி: காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பூ நாளை பாஜகவில் இணைய உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பிரபல நடிகையும் அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளராகவும் இருக்கும் குஷ்பு, பாஜகவில் இணைய போவதாக கடந்த சில வாரங்களாகவே பரபரப்பு தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. எனினும், குஷ்பூ இந்த தகவலை மறுத்து வருகிறார். தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் சென்னை வந்தபோது அந்த நிகழ்ச்சியில் குஷ்பூ கலந்து கொண்டார்.