விருதுநகர் மார்க்கெட்டில் பாமாயில் விலை உயர்வு: கடலை எண்ணெய் சரிவு

விருதுநகர்: விருதுநகர் மார்க்கெட்டில் பாமாயில் டின்னுக்கு ரூ.30 உயர்ந்தது. கடலை எண்ணெய் டின்னுக்கு ரூ.30 குறைந்தது. கடலை புண்ணாக்கு மூட்டைக்கு ரூ.150 சரிந்துள்ளது. அத்தியாவசிய பொருட்கள் அவசர திருத்த சட்டத்தில் இருப்பு வைப்பதற்கான கட்டுப்பாடு நீக்கப்பட்டதை தொடர்ந்து உளுந்து, துவரம் பருப்பு, பொரிகடலை உள்ளிட்ட பருப்பு விலைகளும், ஏற்றுமதி ஆர்டர்கள் மற்றும் தேவை அதிகரிப்பால் வத்தல் விலையும் கடந்த வாரங்களில் உயர்ந்தன. பாமாயில் தேவை அதிகரிப்பால்(அடைப்பிற்குள் கடந்த வார விலை) 15 கிலோ டின்னுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.1,400 (1,370), கடலை எண்ணெய் விற்பனை சரிவால் டின்னுக்கு ரூ.30 குறைந்து (15 கிலோ) ரூ.2,350 (2,380), கடலை புண்ணாக்கு மூட்டைக்கு ரூ.150 குறைந்து (100 கிலோ) ரூ.4,450 (4,600) என விற்பனையானது.

விருதுநகர் மார்க்கெட்டில் நேற்றைய விலை நிலவரம்: ஆந்திரா உளுந்து (100 கிலோ) - ரூ.8,800, பர்மா உளுந்து - ரூ.8,800, உருட்டு உளுந்தம் பருப்பு லயன் - ரூ.12,000, உருட்டு உளுந்தம்பருப்பு பர்மா - ரூ.10,800, தொளி உளுந்தம்பருப்பு - ரூ.10,100. துவரை - ரூ.8,000, துவரம்பருப்பு - ரூ.11,500, உடைப்பு - ரூ.11,000, கடலைப்பருப்பு 100 கிலோ மூட்டை - ரூ.8,000, பொரிக்கடலை 55 கிலோ மூட்டை - ரூ.4,400. கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா பாசிப்பயறு (புதுசு) - ரூ.8,000, ஆந்திரா பயறு - ரூ.7,500, பாசிப்பருப்பு - ரூ.10,800, பாசிப்பருப்பு ஆந்திரா - ரூ.10,200. குண்டூர் ஏசி வத்தல் குவிண்டால் - ரூ.14,500 முதல் ரூ.15,500, முண்டு வத்தல் ஏசி - ரூ.12,000 முதல் ரூ.14,000.

நாடு வத்தல் - ரூ.7,000 முதல் ரூ.8,000. நிலக்கடலை பருப்பு 80 கிலோ மூட்டை - ரூ.5,800, நல்லெண்ணெய் டின் - ரூ.4,043, மல்லி(40 கிலோ) லயன் - ரூ.3,100, நாடு - ரூ.3,200. எள் புண்ணாக்கு - ரூ.1,700, பட்டாணி பருப்பு கனடா - ரூ.7,300, பட்டாணி வெள்ளை - ரூ.8,200. மளிகை பொருட்கள் மொத்த விலை கிலோவில்: மஞ்சள் தூள் - ரூ.130, வெந்தயம் - ரூ.85, கடுகு - ரூ.75, சீரகம் - ரூ.220, சோம்பு - ரூ.135, மிளகு - ரூ.420, புளி - ரூ.160, வெள்ளைப்பூண்டு - ரூ.220, மண்டை வெல்லம் - ரூ.58, சுண்டல்(கருப்பு) - ரூ.60, வெள்ளை - ரூ.80, தட்டாம்பயறு - ரூ.60 என விற்பனையானது.

Related Stories: