வடகொரியாவில் ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு இல்லை: அதிபர் கிம் ஜாங் அன் பேச்சு

பியாங்யாங்: வடகொரியாவில் ஆளும் தொழிலாளர் கட்சியின் 75வது ஆண்டு நிறுவன தின விழாவில் அதிபர் கிம் ஜாங் அன் கலந்து கொண்டு உரையாற்றினார். கிம் ஜாங் கூறுகையில், கொரோனா வைரஸின் பாதிப்புக்கு ஒருவர் கூட பாதிக்கப்படாமல் நல்ல உடல் ஆரோக்கியமுடன் மக்கள் இருப்பதற்காக அவர்களுக்கு நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

உலகம் முழுவதற்கும் பெரும் தீங்கு ஏற்படுத்தி வரும் இந்த தொற்றுநோயில் இருந்து மக்கள் அனைவரையும் நாம் காப்பாற்றியிருக்கிறோம் என்ற உண்மையானது நம்முடைய இயற்கையான பணி, இது நம்முடைய கட்சிக்கு கிடைத்த வெற்றியாகும். இந்த வெற்றியை தொடர்ந்து மக்களின் ஆரோக்கிய தோற்றத்தினை காணும்பொழுது, நன்றி தெரிவிப்பதை தவிர வேறு வார்த்தைகள் எதுவும் என்னிடம் இல்லை என்று கிம் ஜாங் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து வடகொரிய மக்கள் அவர்களாகவே மிக பெரிய வெற்றியை சாதித்து இருக்கிறார்கள். வடகொரியாவின் அண்டை நாடான சீனாவில் உகான் நகரில் கண்டறியப்பட்டு பின்னர் பல நாடுகளிலும் தீவிர பாதிப்புகளுக்கு மக்கள் ஆளாகி வரும் சூழலில், எங்கள் நாட்டில் கொரோனா பாதிப்புகள் இல்லை என வடகொரியா கூறி வந்தது கவனத்தில் கொள்ள கூடியது.

Related Stories: