ஊராட்சிமன்ற தலைவி அவமதிப்பு கனிமொழி எம்பி கண்டனம்

சென்னை: கடலூரில் பட்டியல் இன பெண் ஊராட்சி தலைவியை இருக்கையில் அமர விடாமல் தரையில் அமர வைத்து மன்ற கூட்டம் நடத்திய  செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று கனிமொழி எம்பி கூறினார்.திமுக எம்பி கனிமொழி நேற்று பகல் 12.30 மணி விமானத்தில் டெல்லி சென்றார். அப்போது, அவர் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு  அளித்த பேட்டி:கடலூர் மாவட்டத்தில் பட்டியல் இனத்தை சேர்ந்த பெண் ஊராட்சி மன்ற தலைவியை சீட்டில் அமரவிடாமல் தரையில் அமர வைத்து மன்ற  கூட்டத்தை நடத்திய செயல், நிச்சயமாக வன்மையாக கண்டிக்கக்கூடிய ஒன்று.

இப்படிப்பட்ட நடவடிக்கைகள் தொடரக்கூடாது. அரசு இப்படிப்பட்ட  செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஜாதி என்பது மிகப்பெரிய முட்டாள்தனம் என்பதை மனிதர்கள் புரிந்துகொள்ள வேண்டும். திராவிட இயக்கமும், திமுகவும் இதை எதிர்த்துதான்  தொடர்ந்து பாடுபட்டுக் கொண்டிருக்கிறது. நிச்சயமாக இப்படிப்பட்ட ஒரு மனப்பான்மை முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும்.இவ்வாறு அவர்  கூறினார்.

Related Stories: