தங்கம் விலையில் அதிரடி மாற்றம் ஒரே நாளில் சவரனுக்கு 320 அதிகரிப்பு

சென்னை: தங்கம் விலையில் நேற்று ஒரே நாளில் சவரனுக்கு 320 அதிகரித்தது. இது நகை வாங்குவோரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.கடந்த 5ம் தேதி ஒரு சவரன் 38,568க்கும், 6ம் தேதி 38,880க்கும், 7ம் தேதி 38,448க்கு விற்கப்பட்டது. 7ம் தேதியன்று மட்டும் சவரனுக்கு 432  குறைந்தது. நேற்று முன்தினம் காலையில் 2வது நாளாக தங்கம் விலை சற்று குறைந்தது. கிராமுக்கு 6 குறைந்து ஒரு கிராம் 4,800க்கும்,  சவரனுக்கு 48 குறைந்து ஒரு சவரன் 38,400க்கும் விற்கப்பட்டது. தங்கம் விலை குறைந்து வந்தது நகை வாங்குவோரை சற்று மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் தங்கம்  விலை திடீரென அதிகரித்தது. கிராமுக்கு 10 அதிகரித்து ஒரு கிராம்4,810க்கும், சவரனுக்கு 80 அதிகரித்து ஒரு சவரன் 38,480க்கும்  விற்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று காலையும் தங்கம் விலை அதிரடியாக அதிகரித்து காணப்பட்டது. கிராமுக்கு 32 அதிகரித்து ஒரு கிராம்4,842க்கும்,  சவரனுக்கு 256 அதிகரித்து ஒரு சவரன் 38,736க்கும் விற்கப்பட்டது. மாலையில் தங்கம் விலை மேலும் உயர்வை சந்தித்தது. அதாவது நேற்று  முன்தினம் விலையை விட கிராமுக்கு 40 அதிகரித்து ஒரு கிராம் 4,850க்கும், சவரனுக்கு ₹320 அதிகரித்து ஒரு சவரன் 38,800க்கும்  விற்கப்பட்டது. ஒரே நாளில் சவரன் 320 அளவுக்கு அதிகரித்து இருப்பது நகை வாங்குவோரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. அதே நேரத்தில்  தங்கம் விலை ஒரு நிலையான நிலையில் இல்லாமல் தினமும் ஏறுவதும், இறக்குவதுமாக இருந்து வருவது நகை வாங்குவோரை ஒரு வித  குழப்பத்தையும் ஏற்படுத்தி வருகிறது.

Related Stories: