ஜமீன் ஊத்துக்குளி குளக்கரையோரம் கொட்டப்படும் கழிவுகளால் மக்கள் அவதி

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே ஜமீன் ஊத்துக்குளி கிருஷ்ணாகுளக்கரையோரம் கொட்டப்படும் கழிவுகளால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன் ஊத்துக்குளி கிராமத்தின் ஒரு பகுதியில் கிருஷ்ணாகுளம் உள்ளது. ஜமீன் ஊத்துக்குளியிலிருந்து பாலக்காடு ரோடு நல்லூர் பிரிவை சேர்க்கும் ரோட்டோரம் உள்ள இந்த குளத்தில், அதிகளவு கழிவுதண்ணீரே தேங்கியுள்ளது. அன்மையில் பெய்த பருவமழையால், அணையின் பெரும் பகுதியில் தண்ணீர் நிறைந்தவாறு உள்ளது. ஆனால் இந்த குளக்கரையோரம் இறைச்சிக்கழிவு, கட்டிடக்கழிவு, மருத்துவக்கழிவு உள்ளிட்ட கழிவுகளை கொட்டி செல்வது தற்போது அதிகரித்துள்ளது.

சுமார் இரண்டு ஆண்டுக்கு முன்பு, பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்ததால், கிருஷ்ணாக்குளக்கரையோரம் கழிவுகள் கொட்டப்படுகிறதா என அதிகாரிகள் கண்காணித்தனர்.

இதனால் கழிவுகள் கொட்டப்படுவது பெரும்மளவு தவிர்க்கப்பட்டது. ஆனால் தற்போது மீண்டும், பல்வேறு பகுதியிலிருந்து சரக்கு வாகனங்கள் மூலம் பல்வேறு கழிவு பொருட்களை கொட்டி செல்வது அதிகரித்துள்ளது. இதனால், அந்த வழியாக நடந்து செல்லும் பாதசாரிகள் மற்றும் வாகன ஒட்களும் துர்நாற்றத்தால் அவதிப்படுகின்றனர்.   

சில நேரத்தில், காற்றுக்கு பறந்து கழிவுபொருட்கள் ரோட்டோரம் சிதறி கிடப்பதால் அதனை தெரு நாய்கள் நுகர்ந்து செல்கிறது. எனவே, கிருஷ்ணாகுளக்கரையோரம் கழிவுகள் கொட்டுவதை தவிர்க்க, சம்பந்தபட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: