ஒகேனக்கல் மெயினருவி செல்லும் பாதையில் உலா வந்த முதலை: வனத்துறையினர் பிடித்து மறுவாழ்வு மையத்தில் ஒப்படைப்பு

தர்மபுரி:  ஒகேனக்கல் காவிரியில் இருந்து வெளியேறி சுற்றித்திரிந்த முதலையை வனத்துறையினர் பிடித்து, மறுவாழ்வு மையத்தில் ஒப்படைத்தனர். தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கும் பிரதான அருவிக்கு செல்லும் நடைபாதையில், முதலை உலாவுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர், ஓம்சக்தி கோயில் பகுதியில் 80 கிலோ எடையுள்ள முதலையை, தீயணைப்பு துறையினர் உதவியுடன் பிடித்தனர். இதனையடுத்து, முதலைகள் மறுவாழ்வு மையத்தில் அந்த முதலையை ஒப்படைத்தனர்.

தற்போது காவிரியாற்றில் நீர்வரத்து சரிந்ததையொட்டி, முதலைகள் ஆற்றங்கரையில் இருந்து ஊருக்குள் வர வாய்ப்புள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க, வனத்துறையினர் விரைந்து செயல்பட்டு ஆற்றில் இருக்கும் முதலைகளை பிடித்து, முதலைகள் மறுவாழ்வு மையத்தில் விட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேபோல், கடந்த ஆகஸ்ட் மாதம் ெமயினருவி செல்லும் பகுதியில், 70கிலோ எடை கொண்ட முதலை பிடிபட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: