உறுப்பினர்கள் நியமனத்தைத் தொடர்ந்து நிதிக்கொள்கை மறு சீராய்வு கூட்டம் தொடக்கம்

புதுடெல்லி: ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை மறு சீராய்வுக் கூட்டம், இன்று தொடங்குகிறது. ரிசர்வ் வங்கி, 2 மாதங்களுக்கு ஒரு முறை நிதிக்கொள்கை மறு சீராய்வுக் கூட்டத்தை நடத்துகிறது. இதில், உறுப்பினர்கள் பெரும்பான்மை கருத்துக்கு ஏற்ப, கடன் வட்டி உள்ளிட்ட முக்கிய கொள்கை முடிவுகள் எடுக்கப்படுகின்றன. இந்தக் கூட்டம் கடந்த செப்டம்பர் 29ம் தேதி தொடங்குவதாக இருந்தது. ஆனால், உறுப்பினர்கள் பதவிக்காலம் முடிந்து, புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்படாததால் தேதி குறிப்பிடாமல் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, அசிஷ்மா கோயல், சஷங்கா பைடி, ஜெயந்த் வர்மா ஆகிய 3 பொருளாதார நிபுணர்களை மத்திய அரசு அறிவித்தது. இதைத்தொடர்ந்து, நிதிக்கொள்கைக் கூட்டம் வரும் 7ம் தேதி முதல் அக்டோபர் 9ம் தேதி வரை நடைபெறுகிறது என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

Related Stories: