கொரோனா உறுதியானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு தனிமைப்படுத்துதல் இல்லை

சென்னை: சென்னையில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. கொரோனாவுக்காக சிசிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை கடந்த 10 நாட்களில் 25 சதவீதம் அதிகரித்துள்ளது. தொற்று பாதிப்பும் 11 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த 4ம் தேதி வரை சென்னையில் 1 லட்சத்து 72 ஆயிரத்து 773 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் 1 லட்சத்து 57 ஆயிரத்து 216 பேர் குணமடைந்து உள்ளனர். 12 ஆயிரத்து 283 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 3,274 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்நிலையில் சென்னையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கை கிடையாது என்று சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.

சென்னையில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் தொடர்பாக மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி 4ம் தேதி வரை தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் வீட்டில் இருந்தவர்கள் 55 ஆயிரம் பேர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். சோதனை முடிவுக்காக காத்திருக்கும் 38 ஆயிரம் பேர், வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 71 ஆயிரம் பேர், காய்ச்சல் முகாம் மூலம் கண்டறியப்பட்ட 14 ஆயிரம் பேர் என்று மொத்தம் 1.79 லட்சம் பேர் தற்போது தனிமையில் உள்ளனர். இதில் குறிப்பாக கடந்த 30ம் தேதி முதல் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த யாரும் தனிமைப்படுத்தப்படவில்லை. கடந்த 29ம் தேதி வரை தொடர்பில் இருந்த 8.11 லட்சம் பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் தனிமைப்படுத்துதல் காலத்தை முடிந்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: