நெல்லையில் விளைநிலங்களில் கொட்டப்படும் கட்டிட கழிவுகள்: மாநகராட்சி கவனிக்குமா?

நெல்லை: நெல்லை மாநகரில் விளைநிலங்களில் கட்டிடக் கழிவுகள் கொட்டப்படுவதைத் தடுக்க மாநகராட்சி கவனித்து  உரிய நடவடிக்கை எடுக்குமா? என்ற எதிர்பார்ப்புடன் மக்கள் உள்ளனர். நெல்லை டவுணில் இருந்து குறுக்குத்துறை செல்லும் வழியில் சாலையோரம் உள்ள விளைநிலங்களில் விழிப்புணர்வு இன்றி கட்டிட இடிபாட்டு கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன. இவ்வாறு தொடர்ச்சியாக விளைநிலங்களில் இதுபோன்ற கட்டிடக் கழிவுகளை தொடர்ந்து கொட்டி வந்தால், விவசாயப் பணிகள் பெரிதும் பாதிக்கப்படும்.

இதனால் விளை நிலங்கள் பாதிக்கப்பட்டு நாளடைவில் விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாத தரிசு நிலங்களாகிவிடும். பின்னர் இந்த தரிசு நிலங்கள் விலை நிலங்களாக மாறிவிடும் என இயற்கை ஆர்வலர்கள் வேதனை தெரிவித்தனர். எனவே, நெல்லை மாநகரில் விளைநிலங்களில்  கட்டிடக் கழிவுகள் கொட்டப்படுவதைத் தடுக்க மாநகராட்சி கவனித்து  உரிய  நடவடிக்கை எடுக்குமா? என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் பலமாக எழுந்துள்ளது.

Related Stories: