தேவேந்திரகுல வேளாளர்களை பட்டியலின பிரிவிலிருந்து நீக்க வலியுறுத்தி 6ம் தேதி உண்ணாவிரதம்: டாக்டர் கிருஷ்ணசாமி அறிவிப்பு

சென்னை: புதிய தமிழகம் கட்சி நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வெளியிட்ட அறிக்கை: 2019ம் ஆண்டு ஜனவரி 27ம் தேதியன்று மதுரையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் கூட்டத்தில் பிரதமர் மோடி, ‘‘தேவேந்திரகுல வேளாளர் மக்களுடைய கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்” எனவும், நாடாளுமன்றத் தொகுதிகளிலும், இடைத்தேர்தல் நடைபெற்ற சட்டமன்ற தொகுதிகளிலும் பிரச்சாரத்தின் போது, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ‘‘தேர்தல் முடிந்தவுடன் கோரிக்கை நிறைவேற்றப்படும்’’ எனவும் வாக்குறுதி அளித்தார்கள். ஆனால் வாக்குறுதி காப்பாற்றப்படவில்லை. எனவே தேவேந்திரகுல வேளாளர் அரசாணை மற்றும் பட்டியல் வெளியேற்றக் கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகள் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற வலியுறுத்தி 10,000 இடங்களில் புதிய தமிழகம் கட்சியின் சார்பாக வரும் அக்டோபர் 6ம் தேதி தேவேந்திரகுல வேளாளர் மக்கள் வாழக்கூடிய ஒவ்வொரு பகுதியிலும் ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: