செங்கல்பட்டு மாவட்டத்தில் திமுகவினர் நடத்திய கிராம சபா கூட்டம்: பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்பு

கூடுவாஞ்சேரி: காந்திஜெயந்தியையொட்டி நேற்று தமிழகம் முழுவதும் ஊராட்சிகளில் கிராமசபா நடைபெற இருந்தது. இதில் மத்திய அரசின் வேளாண்  சட்டங்களை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார். இதையறிந்ததும், தமிழக அரசு, கிராம  சபா கூட்டத்துக்க தடை விதித்தது.

இதைதொடர்ந்து, செங்கல்பட்டு மாவட்டத்தில் தமிழக அரசால் நடத்த முடியாத கிராமசபா கூட்டம் ஊரப்பாக்கம் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில்  திமுக சார்பில் கிராமசபா கூட்டம் நேற்று நடந்தது.ஊராட்சி முன்னாள் தலைவர் தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார். காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.ஆராமுதன், மாவட்ட  திமுக இளைஞரணி அமைப்பாளர் எம்.கே.டி.கார்த்திக், ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் ஆப்பூர் சந்தானம், முன்னாள் மாவட்ட கவுன்சிலர்  ஜெ.ஆறுமுகம், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் விஜயகுமார், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஏ.வி.எம்.இளங்கோவன் ஆகியோர் முன்னிலை  வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் எம்எல்ஏ, கலந்து கொண்டு கிராம சபா கூட்டத்தை சமூக  இடைவெளியுடன் நடத்தினார்.இக்கூட்டத்தில் கிராமசபா கூட்டத்தை ரத்து செய்த தமிழக அரசை கண்டித்தும், தமிழக மக்களுக்கு கேடு விளைவிக்க கூடிய வேளாண் சட்ட  மசோதாவை அரசு விடுமுறை நாளில் நிறைவேற்றிய மத்திய அரசை கண்டித்தும், இதனை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தியும்  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நிர்வாகிகள் சிலம்புச்செல்வன், மெய்யழகன், எஸ்.எம்.சேகர், இன்பசேகர், பார்த்திபன், குலசேகர், மலை பி.எஸ்.ராஜா, மலர் தனசேகர், டசி.ஜே.கார்த்திக்,  ஜே.கே.தினேஷ், நாகேஷ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

திருப்போரூர்: திருப்போரூர் ஒன்றியம் சிறுதாவூர் ஊராட்சியில் கிராம சபா கூட்டத்தை ரத்து செய்த தமிழக அரசை கண்டித்து, திமுகவினர் போராட்டம்  நடத்தினர். அதேபோன்று தாழம்பூர் ஊராட்சியிலும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கருணாகரன் தலைமையில் திமுகவினர் தமிழக அரசை  கண்டித்து போராட்டம் நடத்தினர்.

இதற்கிடையில், திருப்போரூர் ஒன்றியத்தின் நாவலூர் மற்றும் முட்டுக்காடு ஊராட்சிகளில் கிராமசபா கூட்டம் நடத்தப்பட்டது. இதில் திருப்போரூர்  திமுக எம்எல்ஏ இதயவர்மன் கலந்துக் கொண்டு பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றார்.

இதில் முட்டுக்காடு ஊராட்சி செயலாளர்கள் ஜெயபால், மயில்வாகனன், நாவலூர் ஊராட்சி செயலாளர் ராஜாராம், திருப்போரூர் தொகுதி தகவல்  தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் எக்ஸ்பிரஸ் எல்லப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அரசு சார்பில் கிராமசபா கூட்டங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், திமுகவினர் நடத்திய கிராமசபா கூட்டங்களில் பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து  கொண்டு மனுக்களை அளித்து பிரச்னைகளை தீர்க்கக் கோரிக்கை வைத்தனர்.

Related Stories: