சேலம்: ஓட்டல், டீக்கடைகளில் பயன்படுத்தப்படும் வர்த்தக காஸ் சிலிண்டர் 26 உயர்த்தப்பட்டுள்ளது. வீட்டு உபயோகத்துக்கான காஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. சர்வதேச சந்தையின் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு காஸ் சிலிண்டர் விலையை மாதத்திற்கு ஒருமுறை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு நிர்ணயித்து வருகிறது. வீடுகளுக்கு 14.2 கிலோ எடையில், ஆண்டுக்கு 12 சிலிண்டர்கள் மானிய விலையில் வழங்கப்படுகின்றன. கடந்த மாதம் போல் இந்த மாதமும் இந்த சிலிண்டர் விலை உயர்த்தப்படவில்லை.