சாதி ரீதியான பதற்றத்தை உருவாக்க முயற்சி: ஹாத்ராஸ் இளம்பெண் பலாத்காரம் செய்யப்படவில்லை...உ.பி. ஏ.டி.ஜி.பி பேட்டி.!!!

லக்னோ: உத்தர பிரதேச மாநிலம், ஹத்ராஸ் மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த 19 வயது  இளம்பெண், கடந்த 14-ம் தேதி தனது தாயுடன் சென்ற போது, உயர் வகுப்பை சேர்ந்த 4 பேரால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பிறகு உடலில் பலத்த காயங்களுடன், நாக்கு துண்டிக்கப்பட்ட நிலையில் கந்தல் கோலத்தில்  கண்டெடுக்கப்பட்டார். அந்த பெண் அலிகாரில் உள்ள ஜேஎன் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அதன் பின்பு, முதுகெலும்பு மிகவும் பாதிக்கப்பட்டதால் கடந்த 28-ம் தேதி டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி, நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இளம்பெண்ணின் மரணத்துக்கு நீதி  கேட்டு நாடு முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. இப்பெண்ணின் மரணத்துக்கு நீதி கேட்டு நாடு முழுவதும் அரசியல் கட்சித்தலைவர்கள், பெண்கள் அமைப்பினர், சமூக ஆர்வலர்கள் குரல் கொடுத்து, போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஹத்ராஸ் வழக்கு தொடர்பாக செய்தியாளர்களிடம் பேட்டியளித்த  உ.பி. கூடுதல் போலீஸ் இயக்குநர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) பிரசாந்த் குமார், பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை என்பதை எஃப்எஸ்எல் அறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது. கழுத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக பாதிக்கப்பட்டவர் இறந்துவிட்டார் என்று பிரேத பரிசோதனை அறிக்கை கூறுகிறது. எஃப்எஸ்எல் அறிக்கை மாதிரிகளில் விந்தணுக்களைக் கண்டுபிடிக்கவில்லை, சாதி அடிப்படையிலான பதற்றத்தைத் தூண்டுவதற்காக சில மக்கள் இந்த விஷயத்தை திசை திருப்பியது என்பதை தெளிவுபடுத்துகிறது. அத்தகைய நபர்கள் அடையாளம் காணப்படுவார்கள் என்றும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: