தலைமை செயலகத்தில் இருந்தும் முதல்வர் நிகழ்ச்சியை புறக்கணித்த ஓபிஎஸ்: இருவருக்கும் மோதலே இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

சென்னை: கட்சி நிர்வாகிகளுடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தனியாக ஆலோசனை நடத்துவதில் தவறு இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவுகிறது. முதலமைச்சர் தலைமையில் நடைபெறும் நிகழ்ச்சிகளை பன்னீர்செல்வம் தொடர்ந்து புறக்கணித்து வரும் நிலையில் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள், ஆதரவாளர்கள் தனித்தனியாக இருவரையும் சந்தித்து வருகின்றனர்.

இதற்கிடையே இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் முதல்வர் வேட்பாளர் குறித்து கட்சியின் கட்டுப்பாட்டை மீறி யாரும் என்று கூறினார். அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசம் உள்பட கட்சியின் கட்டுப்பாடு அனைவர்க்கும் ஒன்று தான். கட்சி நிர்வாகிகளுடன் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தனியாக ஆலோசனை நடத்துவதில் தவறு இல்லை என கூறினார். கட்சி நலன் கருதி அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் ஆகியோரிடையே சண்டையே நடைபெறாததால் சமாதானம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறிய அவர்; சிலர் எதிர்பார்ப்பது போல் அதிமுகவில் எந்த பிளவும் ஏற்படாது.

மாவட்ட ஆட்சியர்களுடன் முதலவர் பழனிசாமி நடத்திய ஆலோசனை கூட்டத்தில் பன்னீர்செல்வம் கலந்துகொள்ளாதது அரசிலாக்கப்படுவதாக ஜெயக்குமார் கூறினார். ஆனால் ஓபிஎஸ் இன்று தலைமை செயலகத்தில் இருந்தும் கூட முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்ட தொடக்க விழாவில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>