தொடர்ந்து 6வது மாதமாக, ஆகஸ்ட்டில் முக்கிய துறைகளின் உற்பத்தி 8.5% சரிவு

புதுடெல்லி: முக்கிய 8 துறைகளின் உற்பத்தி, கடந்த ஆகஸ்ட்டில் 8.5 சதவீதம் சரிந்தது. இது தொடர்ந்து 6வது மாதமாக ஏற்பட்ட சரிவாகும். கொரோனா பரவல் காரணமாக முடங்கிய தொழில்துறைகள் இன்னும் மீள முடியவில்லை. அதிலும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குக் கைகொடுக்கும் தொழில்துறைகள் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகின்றன. இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதத்துக்கான உற்பத்தி விவரங்களை மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டது. நிலக்கரி, உரம், கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு ஆலைகள், ஸ்டீல், சிமென்ட், மின்சார உற்பத்தி ஆகியவை முக்கிய 8 துறைகளாகக் கருதப்படுகின்றன. இதில், நிலக்கரி (3.6%), உரம் (7.3%) உயர்ந்துள்ளது. ஸ்டீல் (6.3%), சுத்திகரிப்பு (19.1%), சிமெண்ட் (14.6%), இயற்கை எரிவாயு (9.5%), கச்சா எண்ணெய் (6.3%), மின் உற்பத்தி (2.7%) சரிந்துள்ளன. நடப்பு நிதியாண்டில் கடந்த ஏப்ரல் ஆகஸ் இடையே இந்த துறைகளின் உற்பத்தி 17.8% சரிந்துள்ளது.

Related Stories: