துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் கே.பி.முனுசாமி சந்திப்பு: ஓபிஎஸ் இல்லம் முன் அவரது ஆதரவாளர்கள் நாளைய முதல்வர், ஜல்லிக்கட்டு நாயகன் என முழக்கம்

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துடன், துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி சந்தித்து பேசி வருகிறார். தமிழகத்தில் 2021ம் ஆண்டு மே மாதம் நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே கடந்த சில மாதங்களாக மோதல் போக்கு ஏற்பட்டது. செயற்குழு கூட்டம் நடந்து முடிந்து 2 தினங்கள் ஆக தொடர்ந்து அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்கின்ற கேள்விக்கு பல்வேறுகட்ட ஆலோசனைகளானது இரு தரப்பிலும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அமைச்சர்கள் அவ்வப்போது, முதல்வர், துணை முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துடன், துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி சந்தித்து பேசி வருகிறார். சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் ஓபிஎஸ்ஸை சந்தித்து கே.பி.முனுசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். நாளைய முதல்வர், ஜல்லிக்கட்டு நாயகன் ஓபிஎஸ் என்று கிரீன்வேஸ் சாலை இல்லம் முன்பு ஆதரவாளர்கள் முழக்கம் எழுப்பி வருகின்றனர். அக்.7-ம் தேதி அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்பது தொடர்பாக அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில் ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். இடையே தொடர்ந்து கருத்து மோதல் ஏற்பட்டு வருகிறது.

Related Stories: