தருமபுரியில் 24 ஆண்டுகளுக்கு பின் கிரானைட் குவாரிகள் ஏலம்.: எதிர்ப்பார்த்ததைவிட இரு மடங்கு அதிமாக ஏலம் போனது

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் 24 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெற்ற கிரானைட் குவாரிகளுக்கான ஏலத்தில் எதிர்ப்பார்த்ததைவிட இரு மடங்கு அதிகமான தொகைக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டம் முழுவதும் 30 கிரானைட் குவாரிகளுக்கான பொது ஏலம் அறிவிக்கப்பட்டு இருந்தது.

மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில், மாவட்ட ஆட்சியர் மலர்விழி மற்றும் கனிமவளத்துறை அதிகாரிகள் தலைமையில் இந்த ஏலம் நடைபெற்றது. மொத்த 17 குவாரிகளுக்கு ஏலம் எடுக்க யாரும் வராததால் மீதம் உள்ள 13 குவாரிகள் மட்டும் ரூ.59 கோடிக்கு ஏலம் விடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

13 குவாரிகளில் ரூ.22 கோடி வரை அரசு தரப்பில் எதிர்ப்பார்த்ததாகவும், அதைவிட இருமடங்கு அதிகமாக ரூ.59 கோடி ஏலம் போகி இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் அரசுக்கு வருவாய் அதிகரித்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் மலர்விழி கூறியுள்ளார்.

Related Stories: