வங்கி கணக்குகள் முடக்கத்துக்கு எதிர்ப்பு:இந்தியாவில் செயல்பட மாட்டோம்: சர்வதேச மன்னிப்பு அமைப்பு அறிவிப்பு

புதுடெல்லி: தனது வங்கிக் கணக்குகளை மத்திய அரசு முடக்கியதை தொடர்ந்து, இந்தியாவில் தாங்கள் செயல்படுவதை நிறுத்துவதாக சர்வதேச மன்னிப்பு அமைப்பு அறிவித்துள்ளது.   ‘சர்வதேச மன்னிப்பு அமைப்பு’ இந்தியாவில் பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. இந்த அமைப்பு சட்ட விரோதமாக நிதி பெற்று வருவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, இதன் அனைத்து வங்கி கணக்குகளையும் மத்திய அரசு கடந்த 10ம் தேதி முடக்கியது. இதனால், இந்தியாவில் செயல்படுவதை நிறுத்துவதாக இந்த அமைப்பு அதிரடியாக நேற்று அறிவித்தது.இது  குறித்து, இந்த அமைப்பின் இந்திய இயக்குனர் அவினாஷ் குமார் கூறுகையில், ``மனித உரிமை அமைப்புகளை, குற்றங்களில் ஈடுபடும் நிறுவனங்களை போல் அரசு நடத்துகிறது. ஆதாரமின்றி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, என்றார்.

இது பற்றி அமலாக்கத் துறை அளித்துள்ள விளக்கத்தில், ‘சர்வதேச மன்னிப்பு அமைப்பு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனுடன் தொடர்புடைய 2 தனியார் நிறுவனங்கள் மீதே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவை இங்கிலாந்தில் இருந்து 2013- 2018 வரை சட்ட விரோதமாக,ரூ. 51.72 கோடி நிதி பெற்றுள்ளன,’ என கூறப்பட்டுள்ளது.

Related Stories: