குடும்பத் தகராறில் விபரீதம்: 2 மகள் எரித்துக் கொலை தாயும் தற்கொலை: மதுரையில் பரிதாபம்

மதுரை:  மதுரை, திடீர் நகர் பகுதியை சேர்ந்தவர் பாண்டியன் (32). இவரது மனைவி தமிழ்ச்செல்வி (28). மகள்கள் வர்ஷிகாஸ்ரீ(4), வர்ணிகாஸ்ரீ (2). பாண்டியன் தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் கூலி வேலை பார்த்து வருகிறார்.  இவர் அடிக்கடி குடித்து விட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்துள்ளார். சம்பள பணத்தை வீட்டில் கொடுக்காததால் தமிழ்ச்செல்வி குடும்பம் நடத்தவே கஷ்டப்பட்டு வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் குடிபோதையில் வீட்டுக்கு வந்த பாண்டியன், மனைவியுடன் தகராறில் ஈடுபட்டார். பின் அவரை சரமாரியாக தாக்கி விட்டு வெளியே சென்றார். இதனால் மன உளைச்சலில் இருந்த தமிழ்ச்செல்வி, தூங்கிக் கொண்டிருந்த 2 மகள்கள் மீதும் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்தார்.

பின்னர் தன் மீதும் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். 3 பேரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்த போது, குழந்தை வர்ஷிகாஸ்ரீஉடல் கருகி அங்ேகயே இறந்து கிடந்தாள். படுகாயமடைந்த தமிழ்ச்செல்வி மற்றும் குழந்தை வர்ணிகாஸ்ரீ யை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே வர்ணிகாஸ்ரீ உயிரிழந்தார். தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி  தமிழ்ச்செல்வி நேற்று மதியம் உயிரிழந்தார். இதுகுறித்து திடீர்நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

>