'ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தீவிரவாத பயிற்சி முகாம்கள்' - ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இந்தியா குற்றச்சாட்டு!!!

ஜெனீவா:  ஆக்கிரமிப்பு காஸ்மீரில் தீவிரவாத பயிற்சி முகாம்களை மூட பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது. ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா மனித உரிமை ஆணையத்தின் கூட்டத்தில் பங்கேற்ற இந்திய பிரதிநிதி பவன்பாதே, அண்மையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்த குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுத்தார். இந்தியாவில் மனித உரிமை மீறல் ஏதும் நடைபெற வில்லை என்றும் சிறுபான்மையின சமூகத்திற்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார். மாற்று மதத்தை சேர்ந்த சிறுபான்மையின மக்கள் பாகிஸ்தானில் கொல்லப்படுவதை உலகம் அறியும் என்று பவன்பாதே குறிப்பிட்டார்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தீவிரவாத பயிற்சி முகாம்களை அமைத்து இந்திய நிலைகளை குறிவைத்து தாக்கும் சம்பவங்கள் நீடித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டினார். மேலும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தொடர்ந்து ஊக்குவித்து வருவதாக பவன்பாதே குறிப்பிட்டார். ஜம்மு, காஷ்மீர், லடாக் ஆகியவை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகள் என்று அவர் தெரிவித்தார். இதனால் ஆக்கிரமிப்பு காஸ்மீரில் தீவிரவாத பயிற்சி முகாம்களை மூட பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று இந்திய பிரதிநிதி பவன்பாதே குறிப்பிட்டிருக்கிறார்.

Related Stories:

>