வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்..!!

சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கும் 3 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது‌. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், ஏனைய கடலோர மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும், கடலூர், நீலகிரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும். சென்னையைப் பொருத்தவரை, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் .

இதனையடுத்து இன்று பெய்த மழையால் பொன்னமராவதி 7 செ.மீ , மானாமதுரை, இலுப்பூர் புளிப்பாட்டி, மணப்பாறை ஆகிய இடங்களில் தலா 6 செ.மீ மழையும், பரமக்குடி, சங்கரிதுர்க், காரைக்கால், நாகப்பட்டினம், நெய்வேலி ஆகிய இடங்களில் தலா 5 செ.மீ மழையும், திருத்துறைப்பூண்டி, கீழ்பென்னாத்தூர், கொடுமுடி, அரவக்குறிச்சி ஆகிய இடங்களில் தலா 4 செ.மீ மழைப் பதிவாகியுள்ளது என தெரிவித்துள்ளார்.

Related Stories: