எல்லையில் சிக்கிய தென் கொரிய அதிகாரியை சாம்பலாக்கிய வட கொரியப் படை: நடுக்கடலில் நடத்த அதிர்ச்சி சம்பவம்.!!!

சியோல்: தென் கொரிய அதிகாரி ஒருவர், வட கொரியப் பாதுகாப்பு அதிகாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. வடகொரியாவுக்கும் தென் கொரியாவுக்கும் இடையிலான கடல் எல்லையாகச் செயல்படும் ராணுவக் கட்டுப்பாட்டு பகுதி அருகே கடந்த 21-ம் தேதி தென் கொரிய மீன்வள அதிகாரி ஒருவர் காணாமல்போனதாகக் கூறப்படுகிறது. அந்த அதிகாரி கண்காணிப்புப் படகில் வட கொரிய எல்லைக்குள் நுழைய முயன்றதாகக் கூறப்படுகிறது. அப்போது காணாமல் போன தென் கொரிய அதிகாரியை வட கொரிய படையினர் சுற்றி வளைத்தனர்.

கொரோனா தடுப்புக் கவசங்கள் அணிந்திருந்த வட கொரிய அதிகாரிகள், தென் கொரிய அதிகாரியிடம் விசாரணை நடத்தியிருக்கிறார்கள். பின்னர் அவரைச் சுட்டுக் கொன்றதுடன், நடுக்கடலிலேயே அவர்மீது எண்ணெயை ஊற்றி, தீ வைத்து சாம்பலாக்கியிருக்கிறார்கள் என தென் கொரியா குற்றம் சாட்டியுள்ளது. 47 வயதான அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டதற்கான சரியான காரணம் தெரியவில்லை, ஆனால் வட கொரிய படைகள் கொரோனா வைரஸ் எதிர்ப்பு உத்தரவின் கீழ் செயல்பட்டிருக்கலாம்.

 வட கொரியாவின் இதுபோன்ற அட்டூழியத்தை எங்கள் இராணுவம் கடுமையாக கண்டிக்கிறது, மேலும் விளக்கங்களை வழங்கவும், பொறுப்புள்ளவர்களை தண்டிக்கவும் கடுமையாகக் கோரிக்கை விடுக்கிறது என்று கூட்டுத் தலைவர்களின் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான ஜெனரல் அஹ்ன் யங்-ஹோ கூறியுள்ளார்.

Related Stories: