உளுந்தூர்பேட்டையில் ஏழுமலையான் கோயில் கட்ட வேண்டும் : ஆந்திர முதல்வருக்கு எடப்பாடி கடிதம்

திருமலை, :உளுந்தூர்பேட்டையில் ஏழுமலையான் கோயில் கட்ட வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஆந்திர முதல்வர் ஜெகன்மோகனுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் தேசிய நெடுஞ்சாலையொட்டிய 4 ஏக்கர் நிலத்தை அறங்காவலர் குழு உறுப்பினர் குமரகுரு, தேவஸ்தானத்திற்கு நன்கொடையாக வழங்கியுள்ளார். எனவே இந்த இடத்தில் விரைவில் ஏழுமலையான் கோயில் கட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இதன்மூலம் சென்னை, புதுச்சேரி, பழனி, திருச்சி, திருவண்ணாமலை, ராமேஸ்வரம், மதுரை ஆகிய ஊர்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் மற்றும் சபரிமலை பக்தர்கள் இங்கு வந்து ஏழுமலையானை தரிசிக்க வாய்ப்பாக அமையும்.எனவே இங்கு தேவஸ்தானம் சார்பில் விரைவில் ஏழுமலையான் கோயில் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு தமிழக அரசின் சார்பில் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் செய்துதரப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த கடிதத்தை அறங்காவலர் குழு உறுப்பினர்கள் சேகர் ரெட்டி, குமரகுரு ஆகியோர் முதல்வர் ஜெகன்மோகனிடம் வழங்கினர்.

Related Stories: