சென்னை : விஜயகாந்த் பூரண உடல் நலத்துடன் இருப்பதாக தேமுதிக தலைமைக்கழகம் தெரிவித்துள்ளது.தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு நேற்று கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து அவர் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் தேமுதிக தலைமைக்கழகம் சார்பில் அவர் பூரண உடல் நலத்துடன் இருப்பதாக அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.