பெட்ரோல், டீசல் தேவையில்லை பெடலை சுற்றினாலே ஓடும் பேட்டரி கார் கண்டுபிடிப்பு: திருமங்கலம் இன்ஜி. மாணவர் அசத்தல்

திருமங்கலம்: மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே மேலஉரப்பனூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனியாண்டி.  காய்கறி கடைக்காரர். இவரது மகன் சிவபாண்டி (21).  மதுரையில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில், ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் 3ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் நண்பர்களான அஜித், முகமது காதர் மற்றும் சுந்தரபாண்டியுடன் இணைந்து சுற்றுச்சூழலை பாதுகாக்கும்  வகையிலான புதிய வகை பெடலிங்குடன் கூடிய பேட்டரி காரை தயாரித்துள்ளார்.

சைக்கிள் போல் பெடலை  சுற்றினால் அதன்மூலமாக மின்சாரம் கிடைத்து காரில் பொருத்தியுள்ள சிறிய ரக பேட்டரி மூலமாக  கார் ஓடத்துவங்குகிறது. மணிக்கு 30  கிமீ வேகத்தில் செல்லலாம். முழு சார்ஜில் பேட்டரி இருக்கும்போது 37 கிமீ வரை செல்ல முடியும்.

Related Stories: