கோபி திமுக முன்னாள் எம்எல்ஏ ஜி.பி.வெங்கிடு கொரோனாவுக்கு பலி

கோபி: கோபி திமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஜி.பி.வெங்கிடு கொரோனா தொற்று காரணமாக நேற்று உயிரிழந்தார். ஈரோடு மாவட்டம் கோபியை சேர்ந்தவர் ஜி.பி. வெங்கிடு (86). கடந்த 1996ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அமைச்சர் செங்கோட்டையனை எதிர்த்து தி.மு.க சார்பில் போட்டியிட்டு சுமார் 15 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர். இவர் தினசரி மார்க்கெட் அருகே பெட்டிக்கடை வைத்திருந்தார். எம்.எல்.ஏ பதவிக்காலம் முடிந்த பின்னும் பெட்டிக்கடையில் வியாபாரம் செய்து வந்தார். 65 ஆண்டுகளுக்கும் மேலாக, தி.மு.க அறிவித்த அனைத்து போராட்டங்களிலும் பங்கேற்று சிறை சென்றவர். இவர் கடந்த 2 நாட்களுக்கு முன் உடல்நிலை பாதிப்புக்குள்ளானார். இதையடுத்து அவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவருக்கு பரிசோதனை செய்தபோது, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று மாலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Related Stories: