இந்தியாவில் கொரோனா பாதிப்பு 20 சதவீதம் குறைந்தது: மத்திய அரசு தகவல்

புதுடெல்லி: நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை, 20 சதவீதம் குறைந்துள்ளது. நேற்று மட்டும் 73,279 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய சுகாதார துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

* நாடு முழுவதும் 55,62,663 பேர் கொரோனா நோய் தொற்றின் காரணமாக இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

* நேற்று ஒரே நாளில் மட்டும் புதிதாக 75,083 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* புதிதாக கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையானது 20 சதவீதம் குறைந்துள்ளது.

* கடந்த 24 மணி நேரத்தில் நோய் பாதித்த 1,053 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை இறந்தவர்கள் எண்ணிக்கை 88,935 ஆக அதிகரித்துள்ளது.

* கொரோனா நோய் தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்ட 44,97,867 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். மேலும், 9,75,861 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

* நாடு முழுவதும் இதுவரை 6,53,25,779 பேரின் மருத்துவ மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

* நேற்று முன்தினம் மட்டும் 9,33,185 பேரின் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளது இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

* ஒரே நாளில் முதல்முறையாக 1.1 லட்சம் பேர் குணமாகினர்

மத்திய சுகாதார துறையின் அறிக்கையில் மேலும், ‘நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத வகையில் 1.1 லட்சம் பேர் குணமாகி இருக்கின்றனர். இதுவரை பாதிக்கபப்ட்டவர்களில் 45 லட்சம் பேர் குணமாகி இருக்கின்றனர். இதில், 79 சதவீதம் பேர் மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, உத்தர பிரதேசம், தமிழ்நாட்டு, ஒடிசா, டெல்லி, கேரளா, மேற்கு வங்கம் மற்றும் பஞ்சாப் மாநிலங்களை சேர்ந்தவர்கள். கடந்த 24 மணி நேரத்தில் மிகவும் அதிகப்பட்சமாக மகாராஷ்டிராவில் 32 ஆயிரம் பேரும், ஆந்திராவில் 10 ஆயிரம் பேரும் குணமாகி இருக்கின்றனர்,’ என கூறப்பட்டுள்ளது.

Related Stories: