தங்கம் விலையில் அதிரடி மாற்றம் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.344 குறைந்தது: நகை வாங்குவோர் மகிழ்ச்சி

சென்னை: தங்கம் விலை நேற்று அதிரடியாக சவரனுக்கு  ரூ.344 குறைந்தது. இந்த விலை குறைவு நகை வாங்குவோரை சற்று மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  தங்கம் விலை கொரோனா ஊரடங்கு காலத்தில் வரலாறு காணாத வகையில் உயர்ந்து வந்தது. கடந்த மாதம் 7ம் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.5,416க்கும், சவரன் ரூ.43,328க்கும் விற்கப்பட்டது.

இந்த நிலையில் இம்மாதம் தொடக்கத்தில் இருந்து தங்கம் விலையில் அதிக ஏற்ற இறக்கம் காணப்பட்டது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை ஒரு கிராம் தங்கம் ரூ.4,958க்கும், சவரன் ரூ.39,664க்கு விற்கப்பட்டது. ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு நேற்று தங்கம் மார்க்கெட் தொடங்கியது. அதில் யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் அதிரடியாக வீழ்ச்சி காணப்பட்டது. அதாவது கிராமுக்கு ரூ.43 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.4,915க்கும், சவரனுக்கு ரூ.344  குறைந்து ஒரு சவரன் ரூ.39,320க்கும் விற்கப்பட்டது. தங்கம் விலை அதிரடியாக ரூ.344 குறைந்துள்ளது நகை வாங்குவோரை சற்று சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.

Related Stories: