ஐபிஎல்2020; ஐதராபாத் அணிக்கு 164 ரன்களை இலக்காக நிர்ணயித்தது பெங்களூரு அணி

துபாய்: ஐபிஎல் டி20 தொடரின் 3வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் அணிக்கு 164 ரன்களை இலக்காக பெங்களூரு அணி நிர்ணயித்தது. துபாயில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்தது. பெங்களூரு அணியில் அதிகபட்சமாக அறிமுக வீரர் படிக்கல் 56 ரன்கள் எடுத்தார். இதனையடுத்து 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி களமிறங்க உள்ளது.

Related Stories: