வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து 28ம் தேதி திமுக தோழமை கட்சிகள் ஆர்ப்பாட்டம்: கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ளும் இடங்கள்

சென்னை: விவசாய விளைபொருள் வர்த்தக மசோதா மற்றும் விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா ஆகிய மசோதாக்கள் மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. கடுமையான அமளிக்கு நடுவே இந்த மசோதா நிறைவேறியது. இந்த மசோதா விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் என பாஜகவினர் கூறினாலும், இது முழுக்க முழுக்க விவசாயிகளுக்கு எதிரான மசோதா என பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டி வருகின்றனர். நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில் வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து 28ம் தேதி திமுக தோழமை கட்சிகள் ஆர்ப்பட்டம் அறிவித்துள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் இன்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாகவும்,

அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் திமுக கூட்டணியினர் ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட  தீர்மானத்தின்படி விவசாயிகள் மற்றும் சிறு வணிகர்களை பாதிக்கும் மத்திய பா.ஜ.க. அரசு நிறைவேற்றியுள்ள மூன்று சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் - அதற்கு துணை போகும் ஆளும் அ.தி.மு.க. அரசைக் கண்டித்தும் மாவட்டத் தலைநகரம் - நகரம் - ஒன்றியம் - பேரூர்களில் நடைபெற உள்ள “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ளும் இடங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ளும் இடங்கள்;

மு.க.ஸ்டாலின்: தலைவர், திராவிட முன்னேற்றக் கழகம்: காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம்

கி.வீரமணி: தலைவர், திராவிடர் கழகம்,: சென்னை மேற்கு

கே.எஸ்.அழகிரி: தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி: சென்னை வடக்கு

வைகோ, எம்.பி.,: பொதுச்செயலாளர், ம.தி.மு.க., -  சென்னை தெற்கு

கே. பாலகிருஷ்ணன்,: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி -  சென்னை கிழக்கு

இரா. முத்தரசன், :இந்திய கம்யூனிஸ்ட் கட்சி: தஞ்சாவூர்

கே.எம்.காதர்மொய்தீன்: தலைவர், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் -   திருச்சி

தொல். திருமாவளவன், எம்.பி. தலைவர், விடுதலை சிறுத்தைகள் கட்சி-  கடலூர்

எம்.எச்.ஜவாஹிருல்லா: தலைவர், மனித நேய மக்கள் கட்சி -  தாம்பரம்

ஈ.ஆர். ஈஸ்வரன்: பொதுச்செயலாளர், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி -  கோவை

ரவி பச்சமுத்து: தலைவர், இந்திய ஜனநாயக கட்சி-  பெரம்பலூர்

Related Stories: