காஷ்மீரில் எல்லையில் கடந்த 8 மாதங்களில் பாகிஸ்தான் ராணுவம் 3,186 முறை தாக்குதல்

புதுடெல்லி: காஷ்மீர் எல்லையில் கடந்த 8 மாதங்களில் பாகிஸ்தான் ராணுவம் 3,186 முறை துப்பாக்கிச்சூடு நடத்தி இருப்பதாக பாதுகாப்பு துறை இணை அமைச்சர் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் பேசிய மத்திய பாதுகாப்பு துறை இணை அமைச்சர் பத் நாயக் கூறியதாவது: கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் செப்டம்பர் 1ம் தேதி வரையிலான 8 மாதங்களில் ஜம்மு காஷ்மீரில் உள்ள எல்லைக்கட்டுப்பாடு கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி 3,186 முறை துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது. இதுமட்டுமின்றி, பாகிஸ்தானுடனான சர்வதேச எல்லையில் 242 முறை எல்லைத்தாண்டிய துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்துள்ளது.

இந்த தாக்குதல்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டதோடு, அனைத்து சம்பவங்கள் குறித்தும் பாகிஸ்தான் அதிகாரிகளிடம் கொண்டு செல்லப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நடத்திய அத்துமீறிய துப்பாக்கிச்சூட்டில் இந்த ஆண்டு 8 இந்திய வீரர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், 2 பேர் காயமடைந்தனர். அதிகளவிலான அப்பாவி பொதுமக்கள், ஆண்கள், பெண்கள், குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். ஏராளமான வீடுகள் மற்றும் கட்டிடங்கள் சேதப்படுத்தப்பட்டன. 2003ம் ஆண்டு இருநாடுகளுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்ட பிறகு, கடந்த 17 ஆண்டுகளில் எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் இந்தாண்டுதான் அதிக எண்ணிக்கையிலான துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடந்துள்ளது. இவ்வாறு அமைச்சர் கூறியுள்ளார்.

Related Stories: