தெற்கு ரயில்வேயில் முதல் தனியார் ரயிலுக்கான அட்டவணை வெளியீடு என தகவல்

சென்னை: தெற்கு ரயில்வேயில் முதல் தனியார் ரயில் இயக்குவதற்கு 15.09.2020-ல் உத்தரவு வெளியிடப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்தியில் பாஜக ஆட்சி பொறுப்பில் வந்த நாள் முதல் நாடு முழுவதும் உள்ள பல அரசு துறைகள் தனியாருக்கு விற்கப்பட்டு வருகிறது. அதில் ரயில்வே துறை முக்கிய இடத்தில் உள்ளது. பல ஆண்டுகளாக அலட்சியம் மற்றும் திறமையற்ற நிர்வாகம் காரணமாக ரயில்வே துறையில் வளர்ச்சி இல்லாமல் உள்ளது.

இதனால் ரயில்வே துறையில் மாற்றங்கள் கொண்டுவரவும், ரயில் நிலையங்களை நவீனமாக்கவும் மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக தனியார் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்தது. இதனை சாதகமாக கொண்டு பல தனியார் நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டு வருகிறது. தனியார் நிறுவனங்களுக்கு  ரயில்வே துறை விற்பதன் மூலம் 5 ஆண்டுகளில் 7.5 பில்லியன் டாலர் வருமானம் கிடைக்கும்  என்று கூறப்படுகிறது.  

இந்நிலையில் முதல் ரயில் சென்னை சென்ட்ரலில் இருந்து திருப்பதி வரை சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதேபோல் எர்ணாகுளம் முதல் கொச்சிவெளி வரை வாரத்திற்கு மூன்று நாள் இரண்டாவது தனியார் ரெயில் இயக்கப்படும்.

இந்த நிலையில் மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து DREU தொழிலாளர்களை திரட்டி சென்ட்ரல் மற்றும் எர்ணாகுளத்தில் போராட்டம் நடத்தப்போவதாக தொழில்சங்கத்தினர் அறிவித்துள்ளனர். 2023-ல் தனியார் ரயில் அனுமதிக்கப்படும் என அறிவித்துவிட்டு கொரோனா ஊரடங்கு காலத்தில் EMU ரயிலை இயக்க அனுமதிக்காமல், தனியார் ரயிலுக்கு அனுமதிப்பது கண்டனத்திற்குறியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனியார் ரயிலை இயக்க விடமாட்டோம். இதனை தமிழக, கேரள மற்றும் ஆந்திரா மக்கள் திரட்டி போராட்டம் நடத்தப்படும் என DREU மத்திய சங்கம் அறிவித்துள்ளது.

Related Stories: