விவசாயம் செழிக்க பெண்கள் மட்டும் வழிபடும் விசித்திர காளி விழா- புதுநெல் அரிசியில் சமைத்து முட்டை கோழி பலியிட்டனர்

சாயல்குடி : கடலாடி அருகே ஏ.புனவாசலில் ஆவாரங்காட்டு காளியம்மன் கோயில் உள்ளது. பருவமழை துவங்கும் முன்பாக, நல்ல மழை பெய்து, விவசாயம் செழிக்க வேண்டும் என வேண்டி, சிலை இல்லாமல் திறந்தவெளியில் இருக்கும் காளியம்மனுக்கு பல ஆண்டுகளாக புதுநெல் அரிசி, முட்டையிடும் நாட்டுக்கோழியை பலியிட்டு விசித்திரமாக வழிபாடு நடத்தி வருகின்றனர். இந்தாண்டு திருவிழா நேற்று முன்தினம் இரவு நடந்தது இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.

இது குறித்து கிராமமக்கள் கூறும்போது, ‘‘ஆண்டுதோறும் பருவ மழை பெய்யத் துவங்கும் சமயத்தில் காளியம்மனுக்கு படையலிட்டு விழா எடுப்பது வழக்கம். கடந்தாண்டு அறுவடை செய்யப்பட்டு சாமிக்கு என ஒதுக்கப்படும் புது நெல்லை, அரிசி எடுத்து சமைத்து வீட்டில் நேர்த்திக்கடனுக்காக வளர்க்கப்பட்டு வரும் முட்டையிடும் நாட்டுகோழியை பலியிடுகிறோம். இதனை இக்கிராமத்தை சேர்ந்த பெண்கள், பெண்களின் வாரிசுகள் மட்டுமே தலைமுறை, தலைமுறையாக சாப்பிட்டு வருகிறோம்.

மிஞ்சுகின்ற உணவு மற்றும் பொருட்களை வீட்டிற்கு கொண்டுச்செல்லக்கூடாது என்பதற்காக கோயில் வளாகத்திற்குள்ளேயே புதைத்துவிட்டுச் செல்கிறோம். வெளிநபர்கள், உறவினர்கள் சாப்பிட்டால் தெய்வக் குற்றமாகி விடும் என நம்புகிறோம்’’ என தெரிவித்தனர்.

Related Stories: