பழநி அருகே 10 மயில்கள் மர்மச்சாவு-வனத்துறை விசாரணை

பழநி : பழநி அருகே பத்துக்கும் மேற்பட்ட மயில்கள் மர்மமான முறையில் இறந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகே கொழுமங்கொண்டான் கிராமத்தில் மானாவாரி நிலங்கள் அதிகளவு உள்ளன. கடந்த சில தினங்களாக பெய்த மழையின் காரணமாகவும், கிணற்று பாசனத்தின் மூலமாகவும் அங்கு மக்காச்சோளம் உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. இங்கு மயில்களின் தொந்தரவு அதிகளவு இருப்பதாக விவசாயிகள் புகார் தெரிவித்து வந்தனர்.

 இந்நிலையில் நேற்று, இங்குள்ள கரிசல்குளம் பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட மயில்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. இதை கண்ட அப்பகுதி மக்கள் சாமிநாதபுரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

போலீசார் கொடுத்த தகவலின் பேரில் பழநி வனத்துறையினர் அங்கு வந்து கால்நடை மருத்துவர் மூலம் மயில்களுக்கு பிரேத பரிசோதனை நடத்தினர். தொடர்ந்து மயில்களை அங்கேயே பெரிய குழி தோண்டி புதைத்தனர். மயில்களுக்கு விஷம் வைக்கப்பட்டதா, அல்லது விவசாய நிலத்தில் உரங்களை சாப்பிட்டு உயிரிழந்ததா என்பது குறித்து வனத்தறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: