புரட்டாசி அமாவாசை: அனுமதி மறுப்பாள் பக்தர்கள் இன்றி காட்சியக்கும் ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம்.!!!

ராமேஸ்வரம்: புரட்டாசி மகாளய அமாவாசைக்கு அனுமதி இல்லாததால் அமைதியானது அக்னி தீர்த்தம் புரட்டாசி மாத மஹாளய அமாவாசை நாளான இன்று ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். இந்தாண்டு கொரோனா ஊரடங்கு மற்றும் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக பக்தர்கள் கூடுவதை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனால் இன்று அக்னி தீர்த்த கடற்கரை செல்லும் வழித்தடங்கள் அனைத்தும் தடுப்புகள் கொண்டு அடைக்கப்பட்டு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அனுமதி மறுப்பாள் பக்தர்கள் இன்றி அமைதியாக காட்சியளிக்கிறது அக்னி தீர்த்தம். ராமநாதசுவாமி கோயிலில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனத்திற்கு செல்கின்றனர்.

Related Stories: