தேவையான நடவடிக்கைக்கு தயார் பொருளாதார மீட்சி படிப்படியாகவே நிகழும்: ரிசர்வ் வங்கி கவர்னர் தகவல்

புதுடெல்லி: பொருளாதார மீட்சி படிப்படியாகத்தான் நிகழும் என, ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் தெரிவித்துள்ளார். இந்திய தொழில் மற்றும் வர்த்தக கூட்டமைப்பு (பிக்கி) ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில், காணொலி மூலம் பங்கேற்று, ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் பேசியதாவது:  நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி -23.9 சதவீதம் ஆக சரிந்தது. மத்திய அரசின் இந்த புள்ளி விவரம், கொரோனா பாதிப்பின் தீவிரத்தை காட்டுகிறது. இருப்பினும், 2வது காலாண்டில் பொருளாதார நடவடிக்கைகளில் சற்று ஸ்திரத்தன்மையை காண முடிகிறது. விவசாயம், உற்பத்தி துறைக்கான பிஎம்ஐ குறியீடு மற்றும் சில தனியார் நிறுவனங்களின் வேலையின்மை தொடர்பான கணிப்புகளில் ஸ்திரத்தன்மையை காண முடிகிறது. எனினும், பொருளாதார மீட்சி முழுமையாக வேரூன்றவில்லை. படிப்படியாகத்தான் இது சாத்தியமாகும். பொருளாதாரம் மேம்பட தேவையான எந்த நடவடிக்கையையும் போர்க்கால அடிப்படையில் உடனடியாக மேற்கொள்ள ரிசர்வ் வங்கி தயாராக உள்ளது என்றார்.

Related Stories: